You are hereBlogs / Tamil's blog / தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்


By Tamil - Posted on 18 January 2011

தமிழ் இலக்கணம்பள்ளிக்கூட வயதில் பாகற்காயாய் கசந்த பாடம். இந்த 2011 ஆம் ஆண்டின் என்னுடைய இலக்கும் தமிழ் இலக்கணத்தை ஓரளவாவது கற்றுக் கொள்வது என்பதே. 'முதலில் பாறைகளை ஜாடிக்குள் போட்டு சுற்றி மணலை நிரப்பு' என்ற நேர மேலாண்மை (time management) சூட்சுமத்தைப் பின்பற்றி தினமும் 20 நிமிடம் இலக்கணம் படிக்க ஒதுக்குவதாகத் திட்டம். படித்ததை மனதில் இருந்து திரும்ப எழுதும் போது புரிதல் மேம்படும் என்பதால், எனக்குப் புரிந்ததைப் பதிவுகளாக எழுதுவதற்கு நேரம் ஒதுக்குவதும் திட்டத்தின் மறுபகுதி. அதன்படி தமிழ் இலக்கணம் பற்றி நான் அறிந்து கொண்டவை கீழ்வண்ணமாக முறைப்படுத்தப் பட்டுக் கோர்க்கப் படும்.

Facebook Comments Box

Tags for தமிழ் இலக்கணம்