You are hereBlogs / தமிழ் பழகுவோம்

தமிழ் பழகுவோம்


சென்னையில் செம்மொழிப் பூங்கா

போன்ஸாய் மரம்நவம்பர் 28, 2010 - அமெரிக்கத் தூதரகத்திற்கு நேர் எதிரே, சென்னை மாநகரத்தின் நடு மத்தியில் தமிழ்ப் பூங்கா ஒன்று திறந்திருக்கிறார்கள். பெயர் செம்மொழிப் பூங்கா. முற்காலத்தில் ஒரு பெயர் பெற்ற ட்ரைவ்-இன் உணவு விடுதி இயங்கிய இடம்.

மந்திரப் புன்னகை - திரைப்பட அனுபவம்

மந்திரப் புன்னகைநவம்பர் 20, 2010 - படத்தை கரு பழனியப்பன் இயக்கி நடித்திருக்கிறார். இடைவேளைக்கு அப்புறம்தான் படம் எழுந்து உட்கார வைக்கிறது. அது வரை திரையரங்கில் பலருக்கு இருக்கை கொள்ளவில்லை. எழுந்து போய்விட்டார்கள். படம் பெரிய முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. பிறகு கதாநாயகனின் நடத்தை பற்றி ரசிகர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆங்கிலப் படத்துக்கு இணையான படுக்கையறைக் காட்சியில் அவர் அறிமுகமாகிறார். கதாநாயகி கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் நடித்த அதே பெண்.

பாப்பி மலர்கள்

பாப்பி மலர்நவம்பர் 1, 2010 - இன்று லண்டனில் நிறையப் பேர் சட்டையில் ஒற்றை பாப்பி மலர் அணிந்திருந்தார்கள். போர் வீரர்கள் சிலைகளுக்குக் கீழே பாப்பி மலர் கொத்துக்கள் இருந்தன.


நண்பர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது அவர் போர்க்காலத்தில் நடந்த வரலாற்றைச் சொன்னார். போர் முடிந்த உடன் இங்கிலாந்தில் வந்து பார்த்தால் நாட்டில் எல்லாமே அழிந்து போயிருந்தனவாம். ஆனால் பாப்பி மலர்கள் மற்றும் அழியாமல் பூத்துக் கிடந்தனவாம்.

நாணய மதிப்பு

நாணயப் பரிமாற்றம்உலக நாடுகள் தத்தம் நாணய மதிப்பை எந்த அளவில் குறியிட்டு நிறுத்துவது என்ற போட்டா போட்டியில் இன்று ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எலிப் பந்தயத்தைப் பற்றி பிறகு சிந்திப்போம். ஒரு நாட்டின் நாணயம் எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.