You are hereBlogs / தமிழ் பழகுவோம்

தமிழ் பழகுவோம்


சமூக ஊடகம் (Social Media)

Social Mediaஅக்டோபர் 9, 2010 - விகடனில் பயனுள்ள கட்டுரைகள் எழுதுகிறார்கள். வருங்காலத் தொழில் நுட்பம் என்ற பகுதியில் சமூக ஊடகம் பற்றிய ஒரு எளிய கட்டுரை கருத்தைக் கவர்ந்தது. இதை விகடன்.காம் இணைய தளத்தில் காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டியிருப்பதால் உரலியை (URL) இங்கே இணைக்க இயலவில்லை. அச்சுப் பதிப்பில் படிப்பவர்கள் படிக்கலாம்.

எந்திரன் திரைப்பட அனுபவம்

எந்திரன்அக்டோபர் 3, 2010 - மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண் துஞ்சார், காதலியின் ஏக்கத்தை மதியார் என்ற ரேஞ்சில் ரஜினி தன் போலவே உருவம் கொண்ட ஒழுக்கமான ரோபோ ஒன்றை வடிவமைக்கிறார். அந்த ரோபோ சொல்வதைத் திருத்தமாகச் செய்கிறது. மனிதனுக்கு உள்ளதைப் போல கோபம், துக்கம், பச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் அதற்கு இல்லை. ரஜினியின் ஆசானுக்கு இந்த அளவிற்குக் கூடச் செய்ய இயலவில்லை. அவருக்கு ரஜினியின் மேல் பொறாமை. ஆகவே ரஜினியின் படைப்பை அங்கீகரிக்க மாட்டேன் என்கிறார்.

இயற்கைத் தெரிவு

டார்வின்சார்லஸ்  1859 ஆம் வருடம் உலகிற்கு அறிமுகப் படுத்திய பதம் "இயற்கைத் தெரிவு" (Natural Selection). சூழ்நிலைக்குப் பொருந்தும் உயிரினங்களே உலகில் பிழைத்திருக்கும் என்பது அவர் கொடுத்த தத்துவம். புத்தியுள்ள உயிரினங்கள் பிழைப்பதற்குத் வழிதரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்திக் கொள்ளும். அப்படிச் செய்ய முடியாத உயிரினங்கள் அழிந்து போகும்.



இங்கிலாந்து நாட்டில் ஒரு காலத்தில் ஆந்துப் பூச்சிகள் (Moth) இருவகையான வண்ணங்களில் இருந்தன. ஒரு வகை மிகவும் அடர்த்தியான கருமை நிறம் கொண்டது. மற்றது கருமை குறைவானதால் பளிச்சென்று தெரியக் கூடியது.

பச்சைக் காற்றே வீசு

அபியும் நானும்எளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது  திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல்.



பச்சைக் காற்றே வீசு, பன்னீர் வார்த்தை பேசு
காலைப் பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு
துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு