You are herepoem

poem


உலகமே ஒரு விளையாட்டு !

தமிழ் செம்மொழிகடேந்திர நாதர் என்ற விளையாட்டுச் சித்தர் பாடியிருக்கும் சித்தர் பாடலில் இருந்து ஒரு பகுதிதாய்தந்தை கூடுவதும் விளையாட்டே - பூவில்
   தநயனாய் வந்ததுவும் விளையாட்டே
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே - பத்து
   வயது தெரிந்ததுவும் விளையாட்டே

தமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை

பஞ்சக் கொடுமை1876 ஆம் ஆண்டு தமிழில் தாது வருடம். அந்த ஆண்டு தமிழகத்தில் சொல்ல முடியாத அளவு பஞ்சம். அந்தப் பஞ்சம் பற்றி நடராஜன் என்பவர் பாடிய நாட்டுப் பாடல் இங்கே. காட்டை (வயலை) உழுது பயிரிடுவோர் கவுண்டர் என்று பாடலில் வருகிறது. பூமியை அடகு (கொதவு) வைத்தாலும் அன்று காசு கொடுப்பாரில்லை. இருந்த நகையெல்லாம் அடகு வைத்தாலும் பிண்ணாக்கு வாங்கக் கூடக் காசில்லை என்று அவலத்தைச் சொல்கிறது இந்தப் பாடல். வயலை விட்டு நகரத்திற்குப் போன எட்டுப் பேரில் மூன்று பேர் பிழைத்தார்கள். மற்றவர்களை காலரா கொண்டு போய் விட்டது. "அதைச் சாப்பிட மாட்டேன் இதைச் சாப்பிட மாட்டேன்" என்று "நொரநாட்டியம்" பேசியவர்கள் மாட்டுக்குப் போடும் பிண்ணாக்கையும் கத்தாழைக் குருத்தையும் மண்திட்டின் மறைவில் நின்று சாப்பிட்டார்களாம். தவசம் என்றால் தானியம் என்று பொருள். தானியம் பிடித்தை கையில் ஈயக் காசுக்கும் வழியில்லையாம். வள்ளம் என்றால் படகு, இங்கு வள்ளம் பற்றிய வரிகள் என்ன சொல்கின்றன என்று புரியவில்லை.பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே

நாலடியார் பாடல் - எது பெருமை?

சங்கத் தமிழ்

இசைந்த சிறுமை இயல்பிலாதார் கண்
பசைந்த துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவார் கண்
பகையேயும் பாடு பெறும்

- நாலடியார்

நற்பண்பில்லாதவனை சிறுமைக் குணம் கொண்டவன் என்றும் கீழ்மகன் என்றும் சித்தரிக்கிறது நாலடியார் பாடல்.

If.. A Poem By Rudyard Kipling

Rudyard KiplingToday I read this poem for the first time and I am thoroughly inspired by its simplicity and clarity.

If you can keep your head when all about you
Are losing theirs and blaming it on you;
If you can trust yourself when all men doubt you,
But make allowance for their doubting too:
If you can wait and not be tired by waiting,
Or, being lied about, don't deal in lies,
Or being hated don't give way to hating,
And yet don't look too good, nor talk too wise;

நாட்டியல் நாட்டுவோம் !

கல்விஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதிதென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்?


நாவலந் தீவென நவிலுவார் கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்

வாழ்வு - பாரதிதாசன் பாடல்

அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல்
லன்பின் விளைவது வாழ்வு
மச்சினில் வாழ்பவரேனும் - அவர்
மானத்தின் வாழ்வது வாழ்வு!
உச்சி மலை விளக்காக - உல
கோங்கும் புகழ் கொண்ட தான
பச்சைப் பசுந் தமிழ் நாட்டில் - தமிழ்
பாய்ந்திட வாழ்வது வாழ்வு!

தகுதி தேவையில்லாமல் கிடைப்பவை

தகுதி மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா - துள்ளிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு


பொருள்:


நெருங்கிய இலைகளை உடைய மரத்தின் நிழலைப் பெற அதன் கீழே இருந்தால் போதும். அது போல மன்னர்களிடம் உதவி பெறுவதற்கும், மகளிர் அழகைப் பார்ப்பதற்கும் அவர்கள் அருகில் இருப்பதைத் தவிர வேறு தகுதி தேவையில்லை

பிழை பொறுத்தல் - உண்மையான நட்பின் தன்மை

இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான் நோவின் அல்லது - துள்ளிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானகநாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது


பொருள்:


காடுகளை உடைய நாட்டின் வேந்தனே, காட்டு மிருகங்களே ஒருவருடன் நன்கு பழகிய பின்னர் அவரிடமிருந்து பிரியாமல் பொறுத்துக் கொள்ளும் போது, மனிதனால் மட்டும் பழகிய நண்பன் தீமை செய்தால் ஏன் பழைய நட்பின் நினைவுடன் பொறுமை (தன்னைத் தானே வருத்திக் கொள்ள வேண்டிய போதும்) காக்க முடியாது?


நாலடியார் பாடல்: பொறையுடைமை

பட்டினத்தார் பாடல்

அழியும் கால் தடம்பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ?


திருப்பாடல் திரட்டு:திருவேகம்பமாலை:7

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே..

அண்மையில் பதிப்பித்து வெளியிட்டிருக்கும் தமிழ் செம்மொழி கீதத்தில், இந்தப் இடுகையின் தலைப்பில் உள்ள வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள். சங்கத் தமிழ்.


தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்