You are hereclassical language

classical language


ஐம்புலன் அடக்குதல்

திருமூலரின் திருமந்திரம்திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல்


திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில்  நுட்பமான பொருள் பதிந்த கருத்துக்களை எளிய நடையில் சொன்னவர். ஐம்புலன்களை அடக்குவதால் உண்டாகும் நன்மை பற்றி அவர் பாடியிருக்கிறார்.


பல பேர் தனக்குள்ளே கவனம் செலுத்தாமல் புறத்தே

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம்பள்ளிக்கூட வயதில் பாகற்காயாய் கசந்த பாடம். இந்த 2011 ஆம் ஆண்டின் என்னுடைய இலக்கும் தமிழ் இலக்கணத்தை ஓரளவாவது கற்றுக் கொள்வது என்பதே. 'முதலில் பாறைகளை ஜாடிக்குள் போட்டு சுற்றி மணலை நிரப்பு' என்ற நேர மேலாண்மை (time management) சூட்சுமத்தைப் பின்பற்றி தினமும் 20 நிமிடம் இலக்கணம் படிக்க ஒதுக்குவதாகத் திட்டம்.

ஐகாரக்குறுக்கமும் ஔகாரக்குறுக்கமும்..

இலக்கணம்மதராசப்பட்டினம் திரைப்படத்தில் ஆங்கில எழுத்துக்களுக்குக் குறில், நெடில் சேர்த்து 'எ', 'ஏ', 'பி', 'பீ', 'சி', 'சீ' ... என்று நகைச்சுவை செய்வார்கள். ஆங்கில மொழி உச்சரிப்பில் குறிலும் நெடிலும் உண்டு என்றாலும் அவற்றின் இலக்கணம் தமிழ் மொழியிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது.  தமிழ் மொழியின் கட்டமைப்பு ஆங்கிலத்தை விடச் சிறந்து விளங்குகிறது என்ற கருத்து இலக்கணம் படிக்கும் போது மனதில் எழுகிறது.

உயிரும் மெய்யும்

இலக்கணம்எந்த மொழிக்கும் மூலம் ஒலி வடிவம். 'மொழி' என்ற வார்த்தைக்கு பேச்சுத் தமிழில் 'பேசு' என்பதே முதல் அர்த்தம். பிறகுதான் அது ஒரு பெயர்ச்சொல்லாகவும் ஆனது என்று இலக்கியம் சொல்கிறது. உலகில் இன்னமும் பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் கிடையாது. இன்றைய தேதியிலும் சில மொழிகளுக்கு ஆங்கில எழுத்துக்களே வரி வடிவம் கொடுப்பதை நாம் பார்க்கிறோம்.


தமிழ் மொழிக்கு அடிப்படை ஒலிகள் முப்பது."எழுத்தெனப்படுப அகரம் முதல் ணகர இறுவாய் முப்பஃது"

இனிமையும் கடுமையும்

தமிழ் செம்மொழிவெங்காரம் என்ற மருந்து உப்பை உபயோகிக்கும் போது மிகவும் துன்பம் தரும். ஆனால் அது நோயைப் போக்கி நன்மை தரும். சிங்கி எனப்படும் (இது Arsenic என்றும் ஒரு வகைக் காயில் இருந்து எடுக்கும் விஷம் என்றும் இரண்டு வேறு பொருள் தமிழ் அகராதியில் கிடைத்தது) விஷம் உபயோகிக்கும் போது உடலுக்குச் சுகமான குளிர்வைத் தரும். ஆனால் உயிரை மாய்த்து விடும். அதே போல நமக்கு எப்போதும் நல்லது நினைப்பவர்கள் கடிந்து வன்மையாகப் பேசினாலும் அது இனிமையான பேச்சு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்குத்

சென்னையில் செம்மொழிப் பூங்கா

போன்ஸாய் மரம்நவம்பர் 28, 2010 - அமெரிக்கத் தூதரகத்திற்கு நேர் எதிரே, சென்னை மாநகரத்தின் நடு மத்தியில் தமிழ்ப் பூங்கா ஒன்று திறந்திருக்கிறார்கள். பெயர் செம்மொழிப் பூங்கா. முற்காலத்தில் ஒரு பெயர் பெற்ற ட்ரைவ்-இன் உணவு விடுதி இயங்கிய இடம்.

மென்மை என்றால் பலகீனமில்லை

அவ்வையார்வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது
நெட்டிருப்பாரைக்கு நெக்குவிடா பாறை
பசுமரத்து வேருக்கு நெக்குவிடும்


- அவ்வையார்


பொருள்:

கல்வி

"வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாதுஅவ்வையார்
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ"


- பொருள்:

புலன் ஆய்ந்து கேட்டல் பற்றி வள்ளுவர் வாக்கு

தமிழ் செம்மொழிதலைமைப் பொறுப்பில் (Leadership position) இருப்பவன் கற்றுக் கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றி வள்ளுவர் அறிந்து சொல்லியிருக்கிறார். எந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டாலும் வள்ளுவர் வாக்கு அங்கே நிற்பதை அறிய முடிகிறது!


உதாரணத்திற்கு "புலன் ஆய்ந்து கேட்கும்" (Listening with senses) திறமை பற்றி சில நாட்களுக்கு முன்னர் எனது ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன். வள்ளுவரின் வாக்கில் அதைப் பற்றிய சில கருத்துக்கள் கீழே:

தகுதி தேவையில்லாமல் கிடைப்பவை

தகுதி மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா - துள்ளிக்
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம்
உழை தங்கண் சென்றார்க்கு ஒருங்கு


பொருள்:


நெருங்கிய இலைகளை உடைய மரத்தின் நிழலைப் பெற அதன் கீழே இருந்தால் போதும். அது போல மன்னர்களிடம் உதவி பெறுவதற்கும், மகளிர் அழகைப் பார்ப்பதற்கும் அவர்கள் அருகில் இருப்பதைத் தவிர வேறு தகுதி தேவையில்லை