You are heresong

song


ஐம்புலன் அடக்குதல்

திருமூலரின் திருமந்திரம்திருமந்திரம் - ஐம்புலன் அடக்குதல்


திருமந்திரம் என்பது திருமூலரின் 3000 பாடல் கொண்ட திரட்டு. நறுக்கென்று நாலு வரிகளில்  நுட்பமான பொருள் பதிந்த கருத்துக்களை எளிய நடையில் சொன்னவர். ஐம்புலன்களை அடக்குவதால் உண்டாகும் நன்மை பற்றி அவர் பாடியிருக்கிறார்.


பல பேர் தனக்குள்ளே கவனம் செலுத்தாமல் புறத்தே

ஒளிபடைத்த கண்ணினாய்

பாரதிபாரதியின் எழுச்சியூட்டும் பாடல் வரிகள்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா


உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா


களிபடைத்த மொழியினாய் வா வா வா


கடுமை கொண்ட தோளினாய் வா வா வா


தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா

இனிமையும் கடுமையும்

தமிழ் செம்மொழிவெங்காரம் என்ற மருந்து உப்பை உபயோகிக்கும் போது மிகவும் துன்பம் தரும். ஆனால் அது நோயைப் போக்கி நன்மை தரும். சிங்கி எனப்படும் (இது Arsenic என்றும் ஒரு வகைக் காயில் இருந்து எடுக்கும் விஷம் என்றும் இரண்டு வேறு பொருள் தமிழ் அகராதியில் கிடைத்தது) விஷம் உபயோகிக்கும் போது உடலுக்குச் சுகமான குளிர்வைத் தரும். ஆனால் உயிரை மாய்த்து விடும். அதே போல நமக்கு எப்போதும் நல்லது நினைப்பவர்கள் கடிந்து வன்மையாகப் பேசினாலும் அது இனிமையான பேச்சு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். நமக்குத்

தமிழ் நாட்டில் தாது வருடப் பஞ்சக் கொடுமை

பஞ்சக் கொடுமை1876 ஆம் ஆண்டு தமிழில் தாது வருடம். அந்த ஆண்டு தமிழகத்தில் சொல்ல முடியாத அளவு பஞ்சம். அந்தப் பஞ்சம் பற்றி நடராஜன் என்பவர் பாடிய நாட்டுப் பாடல் இங்கே. காட்டை (வயலை) உழுது பயிரிடுவோர் கவுண்டர் என்று பாடலில் வருகிறது. பூமியை அடகு (கொதவு) வைத்தாலும் அன்று காசு கொடுப்பாரில்லை. இருந்த நகையெல்லாம் அடகு வைத்தாலும் பிண்ணாக்கு வாங்கக் கூடக் காசில்லை என்று அவலத்தைச் சொல்கிறது இந்தப் பாடல். வயலை விட்டு நகரத்திற்குப் போன எட்டுப் பேரில் மூன்று பேர் பிழைத்தார்கள். மற்றவர்களை காலரா கொண்டு போய் விட்டது. "அதைச் சாப்பிட மாட்டேன் இதைச் சாப்பிட மாட்டேன்" என்று "நொரநாட்டியம்" பேசியவர்கள் மாட்டுக்குப் போடும் பிண்ணாக்கையும் கத்தாழைக் குருத்தையும் மண்திட்டின் மறைவில் நின்று சாப்பிட்டார்களாம். தவசம் என்றால் தானியம் என்று பொருள். தானியம் பிடித்தை கையில் ஈயக் காசுக்கும் வழியில்லையாம். வள்ளம் என்றால் படகு, இங்கு வள்ளம் பற்றிய வரிகள் என்ன சொல்கின்றன என்று புரியவில்லை.பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே

ஒஹொஹோ கிக்கு ஏறுதே

படையப்பாபடம் :  (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்துஒஹொஹோ கிக்கு ஏறுதே
ஒஹொஹோ வெட்கம் போனதே

பச்சைக் காற்றே வீசு

அபியும் நானும்எளிமையான உவமைகள், வலிமையான சொற்கள், ஆழமான கருத்துகள், அருமையான பாடல். இது  திரைப்படப் பாடல். எப்பொழுது கேட்டாலும் மனதை உயரப் பறக்கச் செய்யும் பாடல்.பச்சைக் காற்றே வீசு, பன்னீர் வார்த்தை பேசு
காலைப் பூவே மாலை போடு
தேவை கண்டு தேன் கொடு
துள்ளும் மேகம் தூறல் போடு
சொல்லும் போது போய் விடு

எண்ணத்தின் உயரம் எதுவோ ...

இனிது இனிதுசமீபத்தில் கேட்டு ரசித்த திரைப்படப் பாடல் வரிகள்..உள்ளத்தின் வயது எதுவோ
உலகத்தின் வயது அதுவே !


எண்ணத்தின் உயரம் எதுவோ
இதயத்தின் உயரம் அதுவே !


நல்ல கவிஞர். நிறைய இது போல் எழுத வேண்டும்!!

Video: 
See video

நாட்டியல் நாட்டுவோம் !

கல்விஆகஸ்ட் 15, 2010 - பாரதிதாசன் நாட்டியல் நாட்டுவோம் பாடலில் இருந்து ஒரு பகுதிதென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்?


நாவலந் தீவென நவிலுவார் கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்

ஏழு ஸ்வரங்களுக்குள் - கண்ணதாசன் பாடல்

கண்ணதாசன்


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

 


காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

ஏன் தலை நரைக்கவில்லை

தமிழ் செம்மொழி"ஆண்டு பலவாக நரையிலவாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்
மாண்டவென் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்றலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்
பலர்யான் வாழும் ஊரே"


- பிசிராந்தையார்


பொருள்:


உமக்கு ஏன் தலை நரைக்கவில்லை என்று மக்கள் கேட்டதற்கு பிசிராந்தையார் என்பவர் கூறிய பதில் இது.